/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுமக்களிடம் எஸ்.பி., குறை கேட்பு
/
பொதுமக்களிடம் எஸ்.பி., குறை கேட்பு
ADDED : அக் 07, 2024 06:31 AM

திருக்கனுார்: திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷனில் நடத்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் எஸ்.பி., வம்சித ரெட்டி பங்கேற்று, குறைகளை கேட்டறிந்தார்.
புதுச்சேரி மேற்குப் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 10:30 மணி முதல் 1:30 மணி வரை பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்து வருகிறது.
திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நேற்று இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் கூட்டம் நடந்தது.
சப் இன்ஸ்பெக்டர் பிரியா முன்னிலை வகித்தார். இதில், காவல்துறை தொடர்பான பழைய புகார் மனுகள், குறைகள் குறித்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு மற்றும் அதற்கான விளக்கம் அளித்தனர்.
அப்போது, திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் வந்த மேற்கு பகுதி எஸ்.பி., வமசித ரெட்டி, ஆய்வுமேற்கொண்டு, பொதுமக்கள் தெரிவித்த குறைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.
குறைகளை தெரிவிக்க வந்த பொதுமக்களிடம் நேரடியாககுறைகளைகேட்டறிந்து, அதன் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண போலீசாருக்கு உத்தரவிட்டார்.