/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்காலர் ஸ்பெக்ட்ரா சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா
/
ஸ்காலர் ஸ்பெக்ட்ரா சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா
ஸ்காலர் ஸ்பெக்ட்ரா சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா
ஸ்காலர் ஸ்பெக்ட்ரா சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா
ADDED : டிச 23, 2024 06:23 AM

புதுச்சேரி: ஸ்காலர் ஸ்பெக்ட்ராவில் பயின்று மருத்துவம் மற்றும் என்.ஐ.டி., சேர்ந்த 123 சாதனை மாணவர்களுக்கான பாராட்டு விழா நடந்தது.
ஸ்காலர் ஸ்பெக்ட்ரா நிறுவனம், நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தில் கடந்த ஆண்டு பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று 123 மாணவர்கள் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல மருத்துவ கல்லுாரிகளில், ஜே.இ.இ., தேர்வில் வெற்றி பெற்று என்.ஐ.டி., கல்லுாரியில் சேர்ந்துள்ளனர்.
அவர்களுக்கு பாராட்டு விழா, சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி, சாதனை மாணவர்களை பாராட்டினார்.
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஜிப்மர், என்.ஐ.டி.,யில் பயிலும் ஸ்காலர் ஸ்பெக்ட்ரா மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கினார்.
நிறுவனத்தின் இயக்குநர் சுரேஷ் பேசுகையில், 'இந்நிறுவனத்தின் லட்சியத்தை விரைவில் அடைந்து ஸ்காலர் ஸ்பெக்ட்ரா நீட், ஜே.இ.இ., பயிற்சி நிறுவனமும், ஸ்காலர் பள்ளியும் புதுச்சேரியின் அடையாளமாக உருவாகும்' என்றார். நிறுவன தலைவர் பழனிவேலு, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் அருள், துணை செயலாளர் குகன், துணை பொருளாளர் பாலசுப்ரமணியன் மாணவர்களை வாழ்த்தினர்.
கண் கலங்கிய முதல்வர்
விழாவில் மாணவி வர்ஷா பேசுகையில், 'நான் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்தேன்.
மருத்துவம் படிக்க நீட் பயிற்சி பெற வேண்டும் என்பதால், விவசாய கூலி வேலை செய்யும் என் தாயுடன் ஸ்காலர் ஸ்பெக்ட்ரா நிறுவன சுரேஷ், பழனிவேலை சந்தித்தேன். நீட் பயிற்சிக்கு எந்தவித கட்டணமும் பெறாமல், மருத்துவ படிப்பிற்கான செலவையும் ஏற்று கொள்கிறேன் என உறுதி அளித்து, எனக்கு பயிற்சி கொடுத்தனர்.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், தற்போது கதிர்காமம் மருத்துவ கல்லுாரியில் மருத்துவம் படிக்கிறேன்.
இதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்' என்றார்.
இதனை கேட்டு கண் கலங்கிய முதல்வர் ரங்கசாமி, கை குட்டையால் கண்ணீரை துடைத்தார்.

