/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்காலர் ஸ்பெக்ட்ரா நீட் மாதிரி தேர்வு வெற்றியாளர்கள் கவுரவிப்பு
/
ஸ்காலர் ஸ்பெக்ட்ரா நீட் மாதிரி தேர்வு வெற்றியாளர்கள் கவுரவிப்பு
ஸ்காலர் ஸ்பெக்ட்ரா நீட் மாதிரி தேர்வு வெற்றியாளர்கள் கவுரவிப்பு
ஸ்காலர் ஸ்பெக்ட்ரா நீட் மாதிரி தேர்வு வெற்றியாளர்கள் கவுரவிப்பு
ADDED : மே 03, 2025 04:48 AM

புதுச்சேரி | ஸ்காலர் ஸ்பெக்ட்ரா நீட் மாதிரி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கவுரவிப்பு நிகழ்ச்சி கோர்க்காடு தி ஸ்காலர் பள்ளியில் நடந்தது.
ஸ்காலர் ஸ்பெக்ட்ரா அகாடமி மற்றும் தி ஸ்காலர் ஸ்கூல் இணைந்து,நீட் மாதிரி நுழைவுத் தேர்வை கோர்க்காடு தி ஸ்காலர் ஸ்கூல் பள்ளியில் கடந்த மாதம் 27ம் தேதி நடத்தின. புதுச்சேரி, தமிழக பகுதி மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
இதில், சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற ரக் ஷிதா, பாக்யா, கதிரன இலவன், ஹர்ஷினி, விஷ்ணு ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ. 50,000 பரிசுத் தொகையை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தி ஸ்காலர் பள்ளி மற்றும் ஸ்காலர் ஸ்பெக்ட்ரா அகாடமியின் நிர்வாகத் தலைவர் பழனிவேலு, மாணவர்களை வாழ்த்தி, பரிசுத் தொகை வழங்கினார்.
ஸ்காலர் ஸ்பெக்ட்ரா அகாடமியின் நிர்வாக இயக்குனர் சுரேஷ் மாணவர்கள், பெற்றோர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவப்படுத்தினார்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கூறுகையில், 'ஸ்காலர் ஸ்பெக்ட்ரா மாதிரி தேர்வு, நாளை 4ம் தேதி நடக்கும் நீட் தேர்வினை குழப்பங்களின்றி தைரியமாக எதிர்கொள்ள தேவையான மன உறுதியை கொடுத்தது என்றனர்.
பெற்றோர் கூறுகையில், 'ஸ்காலர் ஸ்பெக்ட்ரா அகடமி நடத்திய மாதிரி நீட் தேர்வு புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழக மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு நம்பிக்கையின் வழிகாட்டியாகவும் இருந்தது' என்றனர்.
நிகழ்ச்சியில், தி ஸ்காலர் பள்ளி மற்றும் ஸ்காலர் ஸ்பெக்ட்ரா அகாடமியின் நிர்வாகத் துணைத் தலைவர் வசந்தி, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் அருள், இணைப் பொருளாளர் பாலசுப்ரமணியன், இணைச் செயலாளர் குகன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினர்.