ADDED : செப் 24, 2026 08:22 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: நெட்டப்பாக்கம் அரசு துவக்கப்பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், மாணவர்கள் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்கள் பார்வையாளர்களை கவர்ந்தது.
பள்ளியில் நடந்த கண்காட்சியை தலைமை ஆசிரியர் தனலட்சுமி துவக்க வைத்தார். கண்காட்சியில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில், அறிவியல், கணிதம் மற்றும் கலை திறன்களை வெளிபடுத்தும் வகையில் படைப்புகள் இடம்பெற்றன. அவைகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.
தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவியல் சார்ந்த விளையாட்டுகள் நடத்தப்பட்டது. கண்காட்சியின் ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஞானசவுந்தரி, கலைச்செல்வி, நித்யா,ஹேமா ஆகியோர் செய்திருந்தனர்.
