ADDED : செப் 25, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
பாகூர்: மூர்த்திக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடந்தது.
ஆசிரியை நவநீதம் வரவேற்றார். தலைமையாசிரியர் சரவணபெருமாள் தலைமை தாங்கினார். கண்காட்சியில், மாணவர்களின் 50க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அகில இந்திய அப்துல் கலாம் பேரவை தலைவர் சாண்டில்யன், மகளிர் அணி தலைவி யமுனா ரவி நிர்வாகிகள் லதா, கராத்தே மாஸ்டர் ரவிந்திரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று, மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு, பரிசுகள் வழங்கி, மாணவர்களை ஊக்கப்படுத்தினர். ஆசிரியை அனுசியா தொகுத்து வழங்கினார். ஆசிரியை மேனகா நன்றி கூறினார்.
