பள்ளி கல்வித்துறை இயக்குனர் லட்சத்தீவுக்கு இடமாற்றம்
பள்ளி கல்வித்துறை இயக்குனர் லட்சத்தீவுக்கு இடமாற்றம்
ADDED : ஏப் 20, 2026 11:17 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குனர் லட்சத்தீவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையின் இயக்குனரான சிவக்குமார், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். இவர், லட்சத்தீவுக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே சிவக்குமாரை புதுச்சேரி பள்ளிக்கல்வி துறையின் இயக்குனர் பொறுப்பில் இருந்து விடுவிக்க கவர்னர் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்திருந்தார். அதன் பேரில், புதுச்சேரி தலைமை செயலாளர் சரத் சவுகான் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
