நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்கால் அடுத்த நெடுங்காடு குரும்பகரம் நல்லாத்துார் மெயின் ரோட்டை சேர்ந்த ஸ்ரீதரன் இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.இவரது மனைவி அஞ்சம்மாள். இவர்களுக்கு மதுமிதா,15; மகள் உள்ளார். தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதற்காக குளிக்க சென்றுள்ளார் வெகுநேரமாக மதுமிதா வெளியில் வராததால் குடும்பத்தினர். கதவை உடைத்து பார்த்தபோது மதுமிதா படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடன் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
புகாரின் பேரில் நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.