sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பள்ளி மாணவர்களுக்கு தலா... ரூ.1,000! புதுச்சேரி அரசு தாராளம்

/

 பள்ளி மாணவர்களுக்கு தலா... ரூ.1,000! புதுச்சேரி அரசு தாராளம்

 பள்ளி மாணவர்களுக்கு தலா... ரூ.1,000! புதுச்சேரி அரசு தாராளம்

 பள்ளி மாணவர்களுக்கு தலா... ரூ.1,000! புதுச்சேரி அரசு தாராளம்


ADDED : மார் 11, 2026 06:43 AM

Google News

ADDED : மார் 11, 2026 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: குடும்ப தலைவிகள், விவசாய தொழிலாளர்களை தொடர்ந்து அடுத்த சலுகையாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் காலணிக்கான பணம் ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலுக்கு ஆயத்தமாகும் பொருட்டு, ஆளும் என்.ஆர்.காங்.,-பா.ஜ., கூட்டணி அரசு, கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் மற்றும் சட்டசபையில் அறிவித்த திட்டங்களையும் வேகவேகமாக நிறைவேற்றி வருகிறது.

அதன்படி கடந்த தேர்தலில் அளித்த குடும்பத் தலைவிக்கு ரூ.ஆயிரம் உதவித் தொகை வாக்குறுதியை ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்குள் சிவப்பு ரேஷன் கார்டு குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கினார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்த பட்ஜெட் கூட்டத்தில், மகளிர் உதவித் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். உடன் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களும், மஞ்சள் ரேஷன் கார்டு குடும்ப தலைவிகளுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதனை ஏற்ற முதல்வர் ரங்கசாமி, மஞ்சள் ரேஷன் கார்டு குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி, எந்தவித உதவித்தொகையும் பெறாத சிவப்பு ரேஷன் கார்டு குடும்ப தலைவிகளுக்கான உதவித் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கினார். தொடர்ந்து மஞ்சள் ரேஷன் கார்டு குடும்ப தலைவிகளுக்கும் ரூ. 1,000 உதவித் தொகை ஓரிரு நாளில் வழங்கப்பட உள்ளது.

அதேபோன்று, வேளாண் துறை சார்பில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்த பயிர் உற்பத்தி மானியம் உயர்வு மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு அறிவித்த மழைக்கால நிவாரணம் ரூ.2,000 திட்டம் கடந்த வாரம் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மானிய விலையில் இ-ஸ்கூட்டர், ஆட்டோக்கள் வழங்கப்பட்டது. இலவச மனைப்பட்டா மற்றும் வீடு கட்டும் திட்ட மானியம் ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டது.

இதேபோன்று, ஒவ்வொரு துறைகளில் அறிவித்த திட்டங்களும் வேகம், வேகமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு அறிவித்த லாப் டாப் மற்றும் மழை கோட்டுகள் வழங்கப்பட்டது. ஆனால், பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதாக அறிவித்த இலவச காலணி மற்றும் புத்தகப்பை இதுவரை வழங்கப்படவில்லை. இத்தனைக்கும் புத்தகப்பை ஏற்கனவே கொள்முதல் செய்தும் சில, பல காரணங்களினால் வழங்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், நேற்று காலை கம்பன் கலையரங்கில் நடந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை விழாவில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி, மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 80 ஆயிரம் மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றம் காலணிக்கான தொகை தலா ரூ.1,000 மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவித்தார்.

முதல்வர் ரங்கசாமி கடந்த ஒரு மாதமாக தினசரி சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு சாலை, வாய்க்கால், குடிநீர் தொட்டி, பள்ளி கட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து வருகிறார். அதேபோன்று, பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக பணியாணை வழங்கி வருகிறார். இதே வேகத்தில் நிலுவையில் உள்ள பிற திட்டங்களையும், தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாக செயல்படுத்திட முழு வீச்சில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால், தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாக மேலும், ஏதேனும் புதிய திட்டங்கள் அறிவிப்பு வெளியிடுவாரோ என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே மேலோங்கி உள்ளது.






      Dinamalar
      Follow us