/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி மதில் சுவர் இடிந்து விழுந்து 5 கடைகள் சேதம் அரியாங்குப்பத்தில் பரபரப்பு

ADDED : டிச 02, 2025 04:42 AM

அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி மதில் சுவர் இடிந்து விழுந்து, 5 கடைகள் சேதமடைந்தன.
அரியாங்குப்பம் புறவழிச்சாலை, சிக்னல் அருகில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. டிட்வா புயலால், நேற்று முன்தினம் மழை பெய்த போது, இரவு 2:00 மணியளவில், சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின், 10 அடி உயர மதில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது, சுவர் பக்க த்தில் இருந்த, ஜூஸ், டிபன், சிக்கன் கடைகள் உட்பட 5 சாலையோர கடைகள் மீது சுவர் விழுந்ததில் , கடைகள் முற்றிலும் சேதமடைந்தன. இடிந்து விழுந்த, கற்கள் மற்றும் சிமென்ட் கா றைகளை அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஜே.சி.பி., மூ லம், நேற்று அகற்றினர்.
மக்கள் நடமாட்டம் இல்லாமல், நள்ளிரவில் மதில் சுவர் இடிந்து விழுந்ததால், பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள், சீர்திருத்தப்பள்ளியில் உள்ள மற்ற மதில் சுவர்கள் பலமாக உள்ளனவா என ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மதில் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அரியாங்குப்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.