/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர்களுக்கு தனித்துவ அடையாள அட்டை 20ம் தேதிக்குள் முடிக்க பள்ளிகளுக்கு உத்தரவு
/
மாணவர்களுக்கு தனித்துவ அடையாள அட்டை 20ம் தேதிக்குள் முடிக்க பள்ளிகளுக்கு உத்தரவு
மாணவர்களுக்கு தனித்துவ அடையாள அட்டை 20ம் தேதிக்குள் முடிக்க பள்ளிகளுக்கு உத்தரவு
மாணவர்களுக்கு தனித்துவ அடையாள அட்டை 20ம் தேதிக்குள் முடிக்க பள்ளிகளுக்கு உத்தரவு
ADDED : ஜன 17, 2025 05:52 AM
புதுச்சேரி: புதிய கல்வி கொள்கையின்படி புதுச்சேரியில் மாணவர்களுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்க பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாட்டில் உள்ள பொதுமக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டது போல நாடு முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தனித்துவ அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த திட்டம், கடந்த 2020-ல் மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது.
இதன்படி மாணவ மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்பட உள்ளது.
இதற்கு பெற்றோர்களின் அனுமதியும் அவசியமாக்கப்பட்டு உள்ளது. இந்த அட்டைக்கு அபார் (Automated Permanent Academic Account Registry) எனப் பெயரிடப்பட்டுள்ளது.இது தொடர்பான சுற்றிக்கை நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக பெற்றோர்களை அழைத்துப் பேசி அனுமதி பெறும் நடவடிக்கையை துவங்கும்படி அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதை ஏற்று அடையாள அட்டை பணியை பல மாநிலங்கள் துவங்கியுள்ளன.
புதுச்சேரியிலும் அபார் தனித்துவ அட்டை எண்ணை மாணவர்களுக்கு வழங்கும் பணி துவங்க அனைத்து பள்ளிகளுக்கு பள்ளி கல்வித் துறை ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இந்த பணியை வரும் 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, தற்போது சுற்றிக்கையை அனுப்பியுள்ளது.
என்ன சிறப்பு
இந்த திட்டம் ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள அட்டை எனவும் அழைக்கப்படுகிறது. இந்த அபார் அட்டையில் அந்த மாணவரின் கல்வி விவரங்களும், கூடுதல் திறமை களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஜே.இ.இ., கியூட், நீட் உள்ளிட்ட அனைத்து நழைவ தேர்வுகளுக்கு இந்த அபார் எண் தேவைப்படும். ஒரு பள்ளியை விட்டு மற்றொரு பள்ளிக்கு இடமாற்றம் அல்லது பிற மாநிலங்களுக்க படிக்க செல்லம்போது இந்த அபார் எண் கட்டாயம் தேவைப்படும் என்பது குறிப்பிடதக்கது.