ADDED : அக் 18, 2026 05:38 PM

புதுச்சேரி: சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் கலை மற்றும் அறிவியல், தனித் திறன் கண்காட்சி நடந்தது.
பள்ளியின் நிர்வாகி சம்பத் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் சுசிலா சம்பத் வரவேற்றார். பள்ளியின் நிர்வாக இயக்குனர் ஹரிஷ் குமார் முன்னிலை வகித்தார்.
விழாவில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு மலர்த்துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
சுல்தான்பேட் அரசு மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் முரளி, கலை மற்றும் அறிவியல் தனித் திறன் கண்காட்சியை துவக்கி வைத்து, பார்வையிட்டார். திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்ராராஜன் வாழ்த்தி பேசினார்.
கண்காட்சியில் எல்.கே.ஜி., முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் 250க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட அரசு நிதி உதவி பெரும் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளியின் பொறுப்பாசிரியர்கள், அலுவலக பொறுப்பாளர்கள், உடற் கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
