/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏம்பலம் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
ஏம்பலம் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : அக் 31, 2025 11:23 PM

வில்லியனுார்: ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளி துணை முதல்வர் மகாலட்சுமி தலைமை தாங்கி, கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் பள்ளியை சேர்ந்த இடநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பிரிவு மாணவர்கள் சார்பில், 250க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் இடம் பெற்றன.
அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். ஏற்பாடுகளை பள்ளி பொறுப்பாசிரியர் தீப்பாய்ந்தான், தலைமை ஆசிரியர் நிலை இரண்டு சாந்தி மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் செய்திருந்தனர். அறிவியல் கண்காட்சியை மாணவர்கள், பெற்றோர்கள் பார்வையிட்டனர்.

