ADDED : செப் 29, 2026 04:55 AM

புதுச்சேரி: புதுச்சேரி, மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் பார்வையிட்டார்.
புதுச்சேரி, மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 'உன்னத பாரதம் வளர்ச்சி அடைந்த பாரதம் 2047' சேவா சங்கல்ப் அபியான் மூலம் மாணவிகளுக்கான ஓவியம், பேச்சு மற்றும் அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளியின் துணை முதல்வர் மகாலட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில், பா.ஜ., மாநிலத் தலைவர் ராமலிங்கம் பங்கேற்று, அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில், மாணவிகளின் 150 மேற்பட்ட அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து, 'உன்னத பாரதம் வளர்ச்சி அடைந்த பாரதம் 2047' தலைப்பில் நடந்த மாணவிகளுக்கான ஓவியம் மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், பா.ஜ., நிர்வாகிகள், விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
