ADDED : செப் 29, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: காட்டேரிகுப்பம் இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளி முதல்வர் ஸ்டெல்லா மேரி தலைமை தாங்கினார். திருபுவனை அரசு உயர்நிலைப்பள்ளி முதல்வர் ஸ்ரீதேவி பங்கேற்று கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
கண்காட்சியில் அறிவியல், சமூக அறிவியல், கணிதம், தமிழ் மற்றும் ஆங்கில பாடங்கள் சார்ந்த மாணவர்களின் 100-க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் படைப்புகள் காட்சிபடுத்தப்பட்டன. பட்டதாரி ஆசிரியர்கள் ருக்குமணி, உதய பானு ஆகியோர் மாணவர்களின் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.
ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர்கள் கீதாஞ்சலி, மர்லின் போர்ஜியா, கலைவாணி, சுஜூ மலர், விஜயலட்சுமி, பைசூன்நாசியா, வெங்கடேசன், உடற்கல்வி ஆசிரியர் பாலச்சந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.
