தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கீழையூர் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கீழையூர் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கீழையூர் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 06:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 06:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: கீழையூர் அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

நடப்பு 2026ம் ஆண்டு, சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டாகவும், சர்வதேச மேய்ச்சல் நிலங்கள் மற்றும் மேய்ப்பாளர்கள் ஆண்டாகவும், சர்வதேச தன்னார்வலர்கள் ஆண்டாகவும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த கருத்துகளை வலியுறுத்தும் வகையில், மாணவர்கள் உருவாக்கிய 80க்கும் மேற்பட்ட படைப்புகள் அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

மேலும், தலைமை ஆசிரியர் அரவிந்த்ராஜாவின் புகைப்பட கண்காட்சி மூலம் அறிவியல் கோட்பாடுகள், சுற்றுச்சூழல் மற்றும் விண்வெளி தொடர்பான தகவல்கள் மாணவர்களுக்கு எளிமையாக விளக்கம் அளிக்கப்பட்டது. கோவில்பத்து அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை ஆசிக் நாச்சியாள் பார்வையிட்டு மதிப்பீடு செய்தார்.

துவக்க விழாவுக்கு தலைமை ஆசிரியர் அரவிந்தராஜா தலைமை தாங்கினார். பள்ளி ஆய்வாளர் ஜெகஜீவன்ராம், சமக்ர சிக் ஷா உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் வனிதா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டனர்.

முன்னதாக, ஆசிரியை அபிராமி வரவேற்றார். ஆசிரியை உதயலட்சுமி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us