/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோத்தாரி வித்யா மந்திர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
கோத்தாரி வித்யா மந்திர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
கோத்தாரி வித்யா மந்திர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
கோத்தாரி வித்யா மந்திர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : ஜன 28, 2026 05:58 AM

புதுச்சேரி: கோத்தாரி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
கண்காட்சிக்கு நிர்வாக இயக்குனர் பங்கஜ் கோத்தாரி, தலைமை தாங்கினார். கண்காட்சியை தாளாளர் ராதிகா கோத்தாரி திறந்து வைத்து பார்வையிட்டார்.
பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புகளை மேலாண்மை டிரஸ்ட் உறுப்பினர் ரம்யா, பள்ளி முதல்வர் பாரதிதாசன், துணை முதல்வர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பார்வையிட்டு பாராட்டினர்.
கண்காட்சியில் மாணவர்களின் படைப்புகளை புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் அறிவியல் துறை சார்ந்த விரிவுரையாளர்கள் கோபந்தசகோ, கிருஷ்ண குமார் ஜெய்ஸ்வால் ஆகியோர் மதிப்பீடு செய்தனர்.