/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணவெளி பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
மணவெளி பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : நவ 17, 2025 02:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளி ராதா மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் குழந்தைகள் தின விழா நடந்தது.
பள்ளி முதல்வர் பெர்லின் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தாளாளர் பரமானந்தம் முன்னிலை வகித்தார். ஆசிரியை மாலா வரவேறறார். பாஸ்கர் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து, பார்வையிட்டார். கண்காட்சியில் மழலையர் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளின் 250க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் இடம் பெற்றன.
ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஜெயச்சந்திரன், ஆசிரியை மலர்கொடி, வனிதா, லீமா, பரமேஸ்வரி, ஸ்ரீ கங்கா, தனம், ஆகியோர் செய்திருந்தனர்.

