/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாசவி சி.பி.எஸ்.இ., பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
வாசவி சி.பி.எஸ்.இ., பள்ளியில் அறிவியல் கண்காட்சி
வாசவி சி.பி.எஸ்.இ., பள்ளியில் அறிவியல் கண்காட்சி
வாசவி சி.பி.எஸ்.இ., பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : டிச 21, 2025 06:09 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை, வாசவி பன்னாட்டு சி.பி.எஸ்.இ., பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி சேர்மன் வேணுகோபால் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் மாரிமுத்து வரவேற்றார்.
சிறப்பு விருந்தினரான புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கே. வெங்கட்ராமன் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை துவக்கி வைத்தார்.
கண்காட்சியில், சுய சார் பு இந்தியாவிற்கான அறிவியல், பொறியியல், கணிதத்தின் மையக்கரு அடிப்படையில் நிலையான வேளாண் மை, நெகிழி கழிவு மேலாண்மை, பசுமை சக்தி, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் செயற்கை நுண்ணறிவு, பொழுதுபோக்கு கணித மாதிரிகள், துாய்மை மற்றும் ஆரோக்கியம், நீர் சிக்கன மேலாண்மை ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் 380 படைப்புகளை காட்சி படுத்தியிருந்தனர்.
மாணவர்கள், தங்கள் படைப்புகளின் செயல் விளக்கத்தை, பார்வையாளர்களுக்கு விளக்கினர்.
திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாவரவியல் விரிவுரையாளர் அருகிரி, ஜீவானந்தம் அரசுப் பள்ளி வேதியியல் ஆசிரியர் பாஷா மற்றும் மின்னணு பயிற்சியாளர் பிரசாந்தி, இளங்கோவடிகள் அரசு மேனிலைப்பள்ளி வேதியியல் விரிவுரையாளர் செல்வஜீனா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு கண்காட்சியில் இடம் பெற்ற படைப்புகளில் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.
தொடர்ந்து, பெற்றோர்கள், மதிப்பீட்டாளர்கள் ஆகியோருக்கு மாணவர்கள் தங்கள் படைப்புகளின் நோக்கத்தை விளக்கினர்.
கண்காட்சிக்கான ஏற்பாடுகளை, பள்ளி துணை முதல்வர் செந்தில்ராஜ், தலைமை ஆசிரியர் சுஜாதா, ஒருங்கிணைப்பாளர் ஜானகி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

