/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அறிவியல் கண்காட்சி சிறுதானிய உணவு திருவிழா
/
அறிவியல் கண்காட்சி சிறுதானிய உணவு திருவிழா
ADDED : நவ 23, 2024 06:19 AM

புதுச்சேரி : கருவடிக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் சிறுதானிய உணவு திருவிழா நடந்தது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் இளங்கோவன் தலைமை தாங்கினார். வட்டம்-1 பள்ளி துணை ஆய்வாளர் குலசேகரன் அறிவியல் கண்காட்சி மற்றும் சிறுதானிய உணவு விழாவை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இதில், 180 அறிவியல் படைப்புகள், 50க்கும் மேற்பட்ட சிறுதானிய உணவு வகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. முன்னாள் ராணுவ வீரர் சசிக்குமார் வாழ்த்தி பேசினார்.
ஏற்பாடுகளை ஆசிரியைகள் நிர்மலா தேவி, விஜயலட்சுமி, பத்மாவதி, கிரிதரணி, சரண்யா, ராஜேஸ்வரி, விஜயலட்சுமி, சங்கீதா, ஆசிரியர்கள் பாரதிதாசன், பழனி ஆகியோர் செய்திருந்தனர்.