/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அறிவியல் கண்காட்சி பரிசளிப்பு விழா
/
அறிவியல் கண்காட்சி பரிசளிப்பு விழா
ADDED : நவ 15, 2024 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: செட்டிப்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில், குழந்தைகள் தினம் மற்றும் அறிவியல் கண்காட்சி பரிசளிப்பு விழா நடந்தது.
ஆசிரியை சுருதி வரவேற்றார். தலைமை ஆசிரியர் தாஜிதீன் அலி அகமது தலைமை தாங்கினார். ஆசிரியைகள் மோகனா, சசிரேகா, மஞ்சு, கனக துர்கா முன்னிலை வகித்தனர்.
பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ரமேஷ், அறிவியல் கண்காட்சியை திறந்து, சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து, குழந்தைகள் தினத்தை யொட்டி, மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
பாலசேவிகா ஆசிரியர் கிருஷ்ணன் சீதாதேவி நன்றி கூறினார்.

