/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அறிவியல் கண்காட்சி பரிசளிப்பு விழா
/
அறிவியல் கண்காட்சி பரிசளிப்பு விழா
ADDED : நவ 23, 2024 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கொத்தபுரிநத்தம் அரசு உயர் நிலைப் பள்ளியில் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, தலைமை ஆசிரியை லட்சுமி காந்தம் தலைமை தாங்கி, பள்ளி மற்றும் மாநில அளவில் நடந்த அறிவியல் கண்காட்சி மற்றும் ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
இதில், நுண் கலை ஆசிரியர் பச்சையப்பன், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பாட்சா, தமிழ்மாறன், நீலாவதி, ஜெயலட்சுமி, திலகவதி, புவனேஸ்வரி, முன் மழலையர் பள்ளி ஆசிரியர் உதய புவனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

