/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயாவில் அறிவியல் கண்காட்சி
/
பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயாவில் அறிவியல் கண்காட்சி
பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயாவில் அறிவியல் கண்காட்சி
பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயாவில் அறிவியல் கண்காட்சி
ADDED : அக் 21, 2024 06:05 AM

புதுச்சேரி: புதுச்சேரி பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், மாணவர்களின் படைப்புகள் பார்வையார்களை வெகுவாக கவர்ந்தது.
கண்காட்சியை பள்ளி தாளாளர் புவனா தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக, லட்சுமி நாராயணா மருத்துக் கல்லுாரி மருத்துவமனையின் குழந்தைகள் மனநல மருத்துவர் வேல் பிரசாந்த் பங்கேற்று கண்காட்சியை பார்வையிட்டு, மாணவர்களின் படைப்புகளை பாராட்டினார்.கண்காட்சியில், வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை வைத்து மறுசுழற்சி, என்றஅடிப்படையில் மாணவர்கள் படைப்புகளை தயார் செய்து கொண்டு வந்தனர்.
அதில், குளிரூட்டும் பெட்டி, போக்குவரத்தை கட்டுபடுத்தும் சென்சார், ஆம்புலன்ஸ் சென்றால், வழி விடுவது குறித்து, விழிப்புணர்வு, இயங்கும் ராக்கெட், வீட்டை சுத்தப்படுத்தும் இயந்திரம், பல ஆண்டுக்கு முன்பு பயன்படுத்திய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தகவல் பரிமாற்றம் சாதனங்கள், ஏ.டி.எம்., மிஷின், மூலிகை தாவரங்களின் பயன்பாடுகள், மூளை வடிவமைப்பு, சிறுநீரகம், இதயம், நுரையீரல், ஆகிய படைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவந்தது.

