/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு துவக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
அரசு துவக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : அக் 04, 2024 03:33 AM

புதுச்சேரி: தட்டஞ்சாவடி அரசு துவக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை வட்ட துணை ஆய்வாளர் குலசேகரன் துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் கீதா தலைமை தாங்கினார். கண்காட்சியில், ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை, பயிலும் மாணவர்கள் 180க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் செய்து, பார்வையாளர்களை வியக்க வைத்தனர்.
ஓசோன் படலத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு கண்காட்சியில் இடப்பெற்றது. நடுவர்களாக சேக்கிழார் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியைகள் பிரியா, ஐஸ்வரியா ஆகியோர் கொண்ட குழுவினர் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.