/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜீவானந்தம் அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
ஜீவானந்தம் அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : அக் 02, 2024 03:03 AM

புதுச்சேரி : காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கிட்லா சத்தியநாராயணா கண்காட்சியை துவக்கி வைத்து, மாணவர்கள் உருவாக்கிய அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார். கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளி துணை முதல்வர் ராமச்சந்திரன், தலைமை ஆசிரியர் பாரி முன்னிலை வகித்தனர்.
நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் படைப்புகள் உருவாக்கப்பட்டு இருந்தது. மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளி அளவில் 200க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. இவற்றில் சிறந்த படைப்புகள் நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டது.
கண்காட்சியை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் பார்வையிட்டனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.