/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நல்லவாடு அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
நல்லவாடு அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : செப் 29, 2024 06:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம், : தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை முதன்மை கல்வி அலுவலர் மோகன் துவக்கி வைத்தார்.
தலைமை ஆசிரியர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் குப்பம்மாள் வரவேற்றார்.
கண்காட்சியில், எல்.கே.ஜி., முதல், எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 150க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் இடம் பெற்றன. நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.