/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.எஸ்.பாளையம் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
பி.எஸ்.பாளையம் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : நவ 15, 2024 04:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: பி.எஸ்.பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
தலைமை ஆசிரியை சித்ரா தேவி வரவேற்றார். பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் சபாபதி, கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதில், மாணவர்களின் அறிவியல், கணிதம், புவியியல் உள்ளிட்ட படைப்புகள் மற்றும் சிறுதானிய உணவு வகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து, மாணவர்களின் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மஞ்சுளா, சுகுணா, ராஜேஸ்வரி, கோவர்தனன், அம்பிகாவதி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.