/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சோலை நகர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
சோலை நகர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : நவ 01, 2024 05:53 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை, சோலை நகர் தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை, பள்ளி துணை ஆய்வாளர் குலசேகரன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார்.கண்காட்சியை மாணவர்கள் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவி பூரணி உள்ளிட்டோர் பார்வையிட்டு. பாராட்டினர்.
கருவடிக்குப்பம் அரசு தொடக்க பள்ளி ஆசிரியை நிர்மலாதேவி, பத்மாவதி, அறிவியல் கண்காட்சி படைப்புகளை மதிப்பீடு செய்து முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை தேர்வு செய்தனர்.
கண்காட்சியில் மொத்தம் 110 அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்ட இருந்தது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் சண்முகசுந்தரம், மர்சியாஸ் அவிலா பாத்திமா, வித்யா, ரத்தின பிரியா, வசந்த பிரியா, தேவி, வளர்மதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.