/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருபுவனை பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
திருபுவனை பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : அக் 02, 2024 03:07 AM
புதுச்சேரி : திருபுவனை அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளியின் தலைமையாசிரியர் சரவணன் தலைமை தாங்கினார். திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ முன்னிலை வகித்தார். கண்காட்சியினை அங்காளன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து, பார்வையிட்டார்.
சிறப்பு அழைப்பளராக கலிதீர்தாள்குப்பம் கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியை நாகநந்தினி கலந்து கொண்டு மாணவர்களின் சிறந்த அறிவியல் படைப்புகளை தேர்வு செய்தனர். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன. அறிவியல் ஆசிரியைகள் காயத்திரி, சண்முகப் பிரியா ஆகியோர் மேற்பார்வையில் அறிவியல் படைப்புகள் இடம்பெற்றிருந்தன.
கண்காட்சி ஏற்பாடுகளை பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.