/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவேகானந்தா பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
விவேகானந்தா பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : நவ 10, 2024 04:16 AM

புதுச்சேரி : புதுச்சேரி, அய்யங்குட்டிப்பாளையம், கோபாலன்கடை விவேகானந்தா சி.பி.எஸ்.இ., பள்ளியில், 2024-25ம் ஆண்டிற்கான கலை, கணிதம் மற்றும் அறிவியல் கண்காட்சி நடந்தது.
விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா கண்காட்சியை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் கீதா வாழ்த்தி பேசினார்.
விவேகானந்தா சி.பி.எஸ்.இ., பள்ளியின் முதன்மை முதல்வர் ஸ்ரீலதா, முதல்வர் மேனகா மேற்பார்வையில் கலை, கணிதம் மற்றும் அறிவியல் கண்காட்சி நடந்தது.
கண்காட்சியில், மாணவர் கள் தங்களின் திறமை களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு படைப்புகள் காட்சிக்கு வைத்திருந்தனர். அதில், பாரம்பரிய கலைகளை பறைசாற்றும் ஓவிய அரங்கம், அறிவியலின் ஆக்கத்தை சொல்லும் அறிவியல் அரங்கம், தொழில் நுட்ப வளர்ச்சியின் கணினி அரங்கம், கருத்துாட்டும் கணித அரங்கம், மந்திர நிகழ்ச்சி அரங்கம், உணவு அரங்கம் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.
கண்காட்சியை மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் பார்வையிட்டனர்.