/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவ கல்லுாரியில் அறிவியல் மாநாடு
/
மருத்துவ கல்லுாரியில் அறிவியல் மாநாடு
ADDED : அக் 29, 2025 06:50 AM

புதுச்சேரி: புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவ கல்லுாரியில் 'தலைச்சுற்றல் பிரச்னைக்கு, நவீன சிகிச்சை' என்ற தலைப்பில் 2வது தேசிய அறிவியல் மாநாடு நடந்தது.
செவித்திறன் மற்றும் பேச்சுக்குறைபாடுகள் கல்லுாரி சார்பில் நடந்த மாநாட்டை விநாயகா மிஷன்ஸ் ரிசர்ச் பவுண்டேஷன் துணை தலைவர் அனுராதா கணேசன் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, தலைச்சுற்றல் குறைபாடுகள், சிகிச்சை அளிப்பதற்கான பரிசோதனை மையத்தை திறந்து வைத்தார்.
கல்லூரி இயக்குநர் அருண் பானிக் வரவேற் றார். ஜிப்மர் மருத்துவ மனை காது, மூக்கு, தொண்டை பிரிவு துறை தலைவர் சிவராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். மாநாட்டின் நோக்கங்கள் குறித்து, துணை இயக்குநர் பிரக்ஞா பாட் பேசினார்.
பேராசிரியர் ராஜன், ஒருங்கினைப்பாளர்கள் ஸ்ரீதர், கலையரசன் மற்றும் பல்வேறு மாநில ஆய்வாளர்கள், மருத்துவ நிபுணர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை துணை பதிவாளர் பெருமாள் செய்திருந்தார்.

