/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்கூட்டர் - பைக் மோதல் மூன்று பேர் காயம்
/
ஸ்கூட்டர் - பைக் மோதல் மூன்று பேர் காயம்
ADDED : பிப் 19, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : கிருமாம்பாக்கம் அடுத்த கொரவள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி மகள் மனிஷா, 16; இவரை அவரது மாமா தர்மசிவம், 60; கடந்த 16ம் தேதி, ஸ்கூட்டரில் அழைத்து சென் றார். புதுச்சேரி - கடலுார் சாலை, காட்டுக்குப்பத்தில் சாலையை கடந்தனர்.
அவ்வழியாக சென்ற கடலுாரை சேர்ந்த கமலேஸ்வரன் என்பவரது பைக், ஸ்கூட்டர் மீது மோதியது. மனிஷா, தர்மசிவமும், கமலேஸ்வரன் காயமடைந்தனர். மூவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கிருமாம்பாக்கம் போக்கு வரத்து போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

