/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்கூட்டரை உடைத்து ரூ.20 ஆயிரம் கொள்ளை
/
ஸ்கூட்டரை உடைத்து ரூ.20 ஆயிரம் கொள்ளை
ADDED : நவ 28, 2025 04:49 AM
புதுச்சேரி: ஸ்கூட்டரில் வைத்திருந்த பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
பிச்சவீரன்பேட்டையை சேர்ந்தவர் புருஷோத்தமன்,68; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் நேற்று முன்தினம் அஜிஸ் நகரில் தனது நண்பர் கிருஷ்ணமூர்த்தியிடம் ரூ.20 ஆயிரத்தை கடன் வாங்கி, தனது ஸ்கூட்டர் பெட்டியில் வைத்து கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார்.
வழியில், உழவர்கரையில் ஸ்கூட்டரை நிறுத்தவிட்டு, அருகில் உள்ள பாரில் மது பாட்டில் வாங்கி னார். அப்போது, மர்ம நபர்கள் இருவர், ஸ்கூட்டரின் சீட்டை உடைத்து அதிலிருந்த பணத்தை எடுப்பதை கண்டு திடுக்கிட்ட புருஷோத்தமன் கூச்சலிட்டபடி ஓடினார். அதற்குள் இருவரும், பி.ஒய்.01.சி.பி. 9478 பதிவெண் கொண்ட பல்சர் பைக்கில் தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

