ADDED : ஆக 27, 2025 11:12 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டை, எம்.ஜி.கே., வீதியை சேர்ந்தவர் ஜெகதீசன், 50; முதலியார்பேட்டை 100 அடி சாலையில் உள்ள பைக் ஷோரூமில் மனிதவள மேலாளர். கடந்த ஜூன் 30ம் தேதி அரியூரைச் சேர்ந்த வேலு, 25; என்பவர் தனது வெள்ளை நிற வெஸ்பா வி.எக்ஸ்.எல்., ஸ்கூட்டியை சர்வீஸ் செய்வதற்காக, இவரது ஷோரூமில் விட்டுள்ளார்.
சர்வீஸ் முடித்த பின், ஸ்கூட்டியை எடுத்து செல்ல வேலு வராததால், ஷோரூம் குடோனில் ஸ்கூட்டியை நிறுத்தி வைத்துள்ளனர். கடந்த ஜூலை 23ம் தேதி வேலு சர்வீஸ் விட்ட தனது ஸ்கூட்டியை எடுத்து செல்ல வந்தபோது, குடோனில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டியை காணவில்லை. இதுகுறித்து ஷோரூம் ஊழியர்களிடம் கேட்டபோது, யாருக்கு ஸ்கூட்டி காணாமல் போனது குறித்து தெரியவில்லை.
ஜெகதீசன் அளித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் பைக் ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி மாயமானது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.