/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பூங்காக்களில் அலறவிடும் அசுத்தம்... செல்ல பிராணிகளுக்கு கடிவாளம் வருமா?
/
பூங்காக்களில் அலறவிடும் அசுத்தம்... செல்ல பிராணிகளுக்கு கடிவாளம் வருமா?
பூங்காக்களில் அலறவிடும் அசுத்தம்... செல்ல பிராணிகளுக்கு கடிவாளம் வருமா?
பூங்காக்களில் அலறவிடும் அசுத்தம்... செல்ல பிராணிகளுக்கு கடிவாளம் வருமா?
ADDED : டிச 01, 2024 05:54 AM
ஐகோர்ட் விதிமுறைகளை பின்பற்றி புதுச்சேரி பூங்காக்களில் செல்ல பிராணிகளை கொண்டு வருவதற்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட வேண்டும்.
புதுச்சேரி நகர வாசிகள் பொழுதை கழிக்கவும், வாக்கிங் செல்லவும் பூங்காக்கள் முதல் தேர்வாக உள்ளது. அப்படி வாக்கிங் வரும்போதும் செல்லப் பிராணிகளையும் சிலர் உடன் அழைத்து வந்து விடுகின்றனர். அவற்றை பூங்காக்களில் உலாவ விட்டு பிஸ்கெட் போடுகின்றனர். அப்போது அப்பிராணிகள் அங்கு மலம் கழித்து பூங்காவை அசுத்தம் செய்கின்றன. இதனால் பூங்காவின் பல இடங்கள் துர்நாற்றம் வீசுகிறது. இது, பூங்காவிற்கு வரும் பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் முகம் சுளிக்க வைக்கிறது. எதற்காக பூங்காவிற்கு வந்தோம் என்று நொந்து புலம்பியப்படி செல்கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
செல்ல பிராணிகளை கொண்டு வரும் உரிமையாளர்களால் புதுச்சேரி பூங்காக்கள் தொடர்ந்து அசுத்தம் அடைகிறது. ஆனால் புதுச்சேரி பூங்காக்களில் செல்ல பிராணிகளுடன் உள்ளே வருபவர்களை தடுப்பது இல்லை. இது தொடர்பாக அவ்வப்போது ஐகோர்ட்டும் பல வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
அண்மையில், கூட, பூங்காவிற்கு செல்லப் பிராணிகளை அழைத்து வருபவர்கள், அவற்றின் கழிவுகளை அகற்ற, கைப்பையை கொண்டு வர வேண்டும் என, பெங்களூரு உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஆனாலும் புதுச்சேரி பூங்காக்களில் துாய்மை பணி பற்றி நகராட்சிகள் கண்டு கொள்ளாமல் உள்ளது.
புதுச்சேரியில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களில் துாய்மை பணிக்காக, திறந்தவெளி பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம் ஆகியவை நகராட்சி அதிகாரிகளால் நடைமுறைப்படுத்த வேண்டும். செல்லப் பிராணிகளின் மலக் கழிவுகளை அகற்ற, கைப்பைகளை உரிமையாளர்கள் கொண்டு வர வேண்டும் என உத்தரவிட வேண்டும்.
இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்தால் மட்டுமே பூங்காக்களை அசுத்தத்தின் பிடியில் இருந்து பாதுகாக்க முடியும்' என்றனர்.

