/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காலாப்பட்டில் கடல் அரிப்பு எம்.பி., முன்னாள் அமைச்சர் ஆய்வு
/
காலாப்பட்டில் கடல் அரிப்பு எம்.பி., முன்னாள் அமைச்சர் ஆய்வு
காலாப்பட்டில் கடல் அரிப்பு எம்.பி., முன்னாள் அமைச்சர் ஆய்வு
காலாப்பட்டில் கடல் அரிப்பு எம்.பி., முன்னாள் அமைச்சர் ஆய்வு
ADDED : நவ 15, 2024 04:14 AM

புதுச்சேரி: மீனவ கிராமங்களில் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளை வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சர் ஷாஜகான் பார்வையிட்டனர்.
காலாப்பட்டு தொகுதி, பிள்ளைச்சாவடி, சின்ன காலாப்பட்டு மீனவ கிராமங்களில் தற்போது பெய்து வரும் மழையில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.
கடற்கரை சாலை, மற்றும் அப்பகுதியில் உள்ள வீடுகள் சேதம் அடைந்தும், படகுகள் நிறுத்த முடியாத அளவிற்கும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியை வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் பார்வையிட்டனர்.
பிள்ளைச்சாவடி கிராமத்தில் தனியாருக்கு ஆதரவாக கல் கொட்டப்பட்டுள்ளது.
மீனவர் கிராமத்திற்கு பயன்படாத வகையில் அரசு செயல்படுவதாகவும், மீனவர்கள் எம்.பி.,யிடம் புகார் தெரிவித்தனர்.
கிழக்கு கடற்கரை பகுதியில், கல் கொட்டப்பட்டுள்ள பரப்பை, மேலும், 50 மீட்டர் அளவிற்கு நீட்டிக்க வேண்டும். பிள்ளைச்சாவடி, சின்ன காலாப்பட்டு பகுதியில் வீடுகள் மற்றும் சாலைகளை பாதுகாக்க வேண்டும், என, எம்.பி.,யிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.
மீன்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கலந்து, ஆய்வு கூட்டம் நடத்துவதாக, எம்.பி., உறுதியளித்தார்.