/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடலோர பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சீ-விஜில் ஒத்திகை
/
கடலோர பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சீ-விஜில் ஒத்திகை
கடலோர பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சீ-விஜில் ஒத்திகை
கடலோர பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சீ-விஜில் ஒத்திகை
ADDED : நவ 21, 2024 12:32 AM

கோட்டக்குப்பம், : கடல்வழி மற்றும் கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்த, சீ-விஜில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று துவங்கியது.
மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதன் எதிரொலியாக கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக, சாகர் கவாச், ஆபரேஷன் பேரிகார்டு, ஆபரேஷன் ஆம்லா என்ற பெயர்களில் அவ்வப்போது கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
ஆண்டிற்கு இரண்டு முறை நடத்தப்படும் பாதுகாப்பு ஒத்திகை, கடந்த செப்டம்பர் மாதம் சாகர் கவாச் என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. நேற்று சீ -விஜில் என்ற பெயரில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நாடு முழுவதும் நடத்தப்பட்டது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கோட்டக்குப்பம் அடுத்துள்ள சோதனைக்குப்பம், நடுக்குப்பம், தந்திராயன்குப்பம், சின்னமுதலியார்சாவடி, ஆரோவில் பீச், பொம்மையார்பாளையம் ஆகிய கடலோர பகுதிகளில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
இதில், இந்திய கடலோர பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார், தீவிரவாதிகள் போன்று வேடம் அணிந்து முக்கிய இடங்களில் ஊடுருவ முயற்சி செய்வதும், அவர்களை அனைத்து பாதுகாப்பு துறையினரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்துவது போன்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நேற்று துவங்கிய இந்த ஒத்திகை நிகழ்ச்சி இன்றும் நடக்கிறது.