/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விபசாரம் நடந்த பியூட்டி பார்லருக்கு 'சீல்'
/
விபசாரம் நடந்த பியூட்டி பார்லருக்கு 'சீல்'
ADDED : மார் 16, 2024 11:09 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் விபசாரம் நடந்த பியூட்டி பார்லருக்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து சீல் வைத்தனர்.
புதுச்சேரி, பாரதி வீதியில் உள்ள மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், பெரியக்கடை போலீசார் கடந்த 28 ம் தேதி அங்கு திடீர் சோதனை நடத்தினர். அங்கு, 7 பெண்கள், 4 ஆண்கள் இருந்தனர்.
விசாரணையில், விபசாரம் நடத்திய ஒரு பெண் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். 7 பெண்களை மீட்டு காப்பக்கத்தில் ஒப்படைத்தனர்.விபசாரம் நடந்து வந்த பாரதி வீதி, ைஷன் பியூட்டி கேர் மற்றும் மசாஜ் சென்டர் மீது நடவடிக்கை எடுக்க புதுச்சேரி நகராட்சிக்கு பெரியக்கடை போலீசார் பரிந்துரை செய்தனர்.
அதனை ஏற்று புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, பியூட்டி பார்லரை சீல் வைக்க உத்தரவிட்டார். புதுச்சேரி நகராட்சி வருவாய் அதிகாரி பிரபாகர், பெரியக்கடை சப் இன்ஸ்பெக்டர் முருகன் முன்னிலையில் ைஷன் பியூட்டி கேர் மற்றும் மசாஜ் சென்டரை பூட்டி நேற்று காலை சீல் வைத்தனர்.

