தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இளைஞர் காங்கிரசில் பேச்சாளர்களுக்கான தேடல்

இளைஞர் காங்கிரசில் பேச்சாளர்களுக்கான தேடல்

இளைஞர் காங்கிரசில் பேச்சாளர்களுக்கான தேடல்


ADDED : பிப் 28, 2024 07:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2024 07:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி மாநில இளைஞர் காங்., சார்பில் நடந்த இளைய பேச்சாளர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில மற்றும் மாவட்ட அளவிலான பதவிகளில் நியமிக்கப்பட உள்ளனர்.

புதுச்சேரி மாநில இளைஞர் காங்., தலைவர் ஆனந்த்பாபு தலைமையில், அகில இந்திய இளைஞர் காங்., செய்தி தொடர்பாளரும், கேரளா மற்றும் புதுச்சேரி பொறுப்பாளருமான கோதண்டன் முன்னிலையில், இளைய பேச்சாளர்களுக்கான தேடல் குறித்த பேச்சு போட்டி நடந்தது.

காங்., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆனந்தபாபு சான்றிதழ் வழங்கினார். வெற்றி பெற்றவர்கள், புதுச்சேரி மாவட்ட மற்றும் மாநில அளவிலான செய்தித் தொடர்பாளர்களாகவும், பேச்சாளர்களாகவும் நியமிக்கப்பட உள்ளனர்.

மேலும், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெறுவர். அதிலும் வெற்றி பெறுவோருக்கு, தேசிய அளவிலான பதவிகள் வழங்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us