/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை காப்பாற்ற முயன்றவர் நீரில் மூழ்கி பலி மாயமானவரை தேடும் பணி தீவிரம்

ADDED : ஜன 01, 2025 06:53 AM

திருக்கோவிலுார் : தென்பெண்ணை ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை காப்பாற்ற முயன்றவர் பலியானார். மாயமான சிறுவனை தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார், அண்ணா நகரை சேர்ந்தவர் முருகன் மகன் கோபி,45; எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். நேற்று மதியம், வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்த திருவண்ணாமலை, ராகவேந்திரர் நகரை சேர்ந்த ஜீவா மகன் யோகேஷ்,17; வெற்றிவேல்,16; மற்றும் குடும்பத்தினருடன் ஆற்றில் குளிக்க சென்றனர்.
ஆபத்தான பகுதியாக கருதப்படும் நீலகண்டன் பாறை அருகே குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது வெற்றிவேல், யோகேஷ் இருவரும் ஆற்றில் அடித்துச் செல்வதை பார்த்து, அவர்களை காப்பாற்ற கோபி ஆற்றில் குதித்தார். வெற்றிவேலை காப்பாற்றி கரை சேர்த்து விட்டு, யோகேஷை மீட்பதற்காக சென்றபோது, கோபியும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
கரையில் இருந்து இதை பார்த்துக் கொண்டிருந்த உறவினர்கள் கூச்சலிட்டனர். அதை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் திருக்கோவிலுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை 4:30 மணியளவில் கோபியின் உடல் அந்திலி, லட்சுமி நரசிம்மர் கோவில் பாறை பகுதியில் மீட்கப்பட்டது. யோகேஷை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.