ADDED : செப் 12, 2026 06:04 PM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலை முன்னிட்டு கோரிமேடு எல்லையில் எஸ்.பி., வம்சிதர ரெட்டி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநில தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும், அக்., 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், தொகுதி எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார், தேர்தல் பறக்கும் படையினர் இணைந்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அதன்படி, கோரிமேடு எல்லையில் வடக்கு பகுதி எஸ்.பி., வம்சிதர ரெட்டி தலைமையில் டி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் தேர்தல் பறக்கும் படையினர் இணைந்து வெளிமாநில வாகனங்கள், சரக்கு வாகனங்கள், கார், பைக் உள்ளிட்டவைகளில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் ஏதேனும் கொண்டு வரப்படுகிறதா என தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
