3,784 ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்கு இரண்டாம் கட்டப் பயிற்சி நிறைவு
3,784 ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்கு இரண்டாம் கட்டப் பயிற்சி நிறைவு
ADDED : மார் 29, 2026 11:00 PM

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 23 மையங்களில், ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்கான 2ம் கட்டப் பயிற்சி வகுப்புகள் நேற்று நிறைவடைந்தது.
மாவட்ட தேர்தல் அதிகாரியின் மேற்பார்வையில் புதுச்சேரியில் 23 மையங்களில் ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்கான 2வது கட்ட பயிற்சி வகுப்புகள் கடந்த இரு தினங்களாக நடந்தது. தேர்தலில் வாக்காளர்கள் எவ்வித சிரமமுமின்றி தங்களது ஓட்டுகளை, பதிவு செய்வதற்கு அனைத்து ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிவதற்கும் ஓட்டுச்சாவடி அதிகாரிகள் தற்செயல்கலப்பு முறையில் 3 ஆயிரத்து 784 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இப்பயிற்சி வகுப்பில், ஓட்டுப்பதிவு நாளன்று கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் வி.வி.பி.ஏ.டி., இயந்திரங்களை எவ்வாறு கையாளுதல், ஓட்டுப்பதிவின்போது, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்படின், அதற்கு மாற்று இயந்திரங்களை வழங்குதல், இந்த பணிகளின்போது பூர்த்தி செய்ய வேண்டிய படிவங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.
மேலும், ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் வி.வி.பி.டி., இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து செயல்விளக்கமும் இப்பயிற்சி வகுப்பில் அளிக்கப்பட்டது.
