/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இரண்டாவது உலகத் திரைப்பட விழா நிறைவு
/
இரண்டாவது உலகத் திரைப்பட விழா நிறைவு
ADDED : ஆக 11, 2025 06:50 AM
புதுச்சேரி : புதுச்சேரி திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சிஸ், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 2வது உலகத் திரைப்படத் திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது.
சுய்ப்ரோன் வீதி, அலையன்ஸ் பிரான்சிஸில், தேசிய விருதாளர் எடிட்டர் ஸ்ரீதர் பிரசாத் துவக்கி வைத்தார். 2வது நாள் விழாவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 9 திரைப்படங்களுக்கு, திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. திரைப்படங்களின் எதிர்காலம் என்ற தலைப்பில் கலந்துரையாடல், இரண்டு நாட்கள் திரையிடப்பட்ட திரைப்படங்கள் குறித்த கருத்துப்பதிவுகள் நடந்தன.
3வது நாளான நேற்று உலக திரைப்பட நிறைவு விழா நடந்தது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க செயலர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். இயக்குநர் சிவக்குமார், தமிழ்நாடு திரை இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மணி, புதுச்சேரி திரை இயக்க செயலாளர் பச்சையம்மாள், பொருளாளர் செல்வம் கலந்து கொண்டனர்.
3 நாட்கள் நடந்த உலக திரைப்பட திருவிழாவில் பிரெஞ்சு, ஸ்பெயின், ஈரான், தமிழ், அர்ஜென்டினா, அமெரிக்கா, இந்தி திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

