/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரிக்கு எம்.பி.,க்கள் குழு வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ADDED : பிப் 17, 2024 05:09 AM

புதுச்சேரி : பார்லிமெண்ட் எம்.பி.,க் கள் குழு வருகையை யொட்டி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் திட்டங்களை 30 எம்.பி.,க்கள் கொண்ட குழு வரும் 21, 22 ஆகிய தேதிகளில் முகாமிட்டு ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள அரசு துறைகள் அனைத்தும் முழு வீச்சில் அதற்கான ஆயத்த பணிகளை முடுக்கி விட்டுள்ளன.
ஒவ்வொரு துறையில் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்கள் பற்றிய தற்போதைய நிலை குறித்த விபரங்கள் கடந்த ஒருவாரமாக திரட்டப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் பார்லிமெண்ட் எம்.பி.,க்கள் தங்குமிடம்,செல்லும் பயண பாதை,ஆய்வு நடக்கும் இடங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எம்.பி.,க்களை சென்னையில் இருந்து அழைத்து வரவும் ஒப்பந்த கார்கள் ரெடி செய்து, பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
இவை கொக்கு பார்க் தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை கமிட்டி வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.