/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாதுகாப்பு படை வீரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
/
பாதுகாப்பு படை வீரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
பாதுகாப்பு படை வீரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
பாதுகாப்பு படை வீரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
ADDED : செப் 28, 2024 06:59 AM

நெல்லிக்குப்பம், : உடல்நலக்குறைவால் இறந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் உடல், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
நெல்லிக்குப்பம் அடுத்த எழுமேடு அகரத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் சதீஷ்குமார், 42; மத்திய பாது காப்பு படை வீரர்.
சென்னை ஆவடியில் உள்ள பிரிவில் பணிபுரிந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அதனைத் தொடர்ந்து சதீஷ்குமாரின் உடல், அவரது சொந்த ஊரான அகரத்தில், மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த நெல்சன் தலைமையில் வீரர்கள் அரசு மரியாதை செலுத்தி, ௨௧ குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
சதீஷ்குமாருக்கு ரேவதி என்ற மனைவியும், மோகேஷ்,8, என்ற மகனும் உள்ளனர்.