/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விதைப்பந்து உருவாக்குதல் பயிற்சி கருத்தரங்கு
/
விதைப்பந்து உருவாக்குதல் பயிற்சி கருத்தரங்கு
ADDED : ஜன 25, 2025 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை சார்பில், விதைப்பந்து உருவாக்குதல் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
ஆசிரியை கலைச்செல்வி வரவேற்றார். தலைமை ஆசிரியர் அரிவரதன் தலைமை தாங்கினார். விவேகானந்தன் வாழ்த்தி பேசினார்.
பசுமை படை பொறுப்பாளர் ஆசிரியர் முருகன் விதைப்பந்து உருவாக்குதல், அவற்றின் நன்மைகள், பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். பசுமைபடை மாணவர்கள் பங்கேற்று, பயிற்சி பெற்றனர்.
ஆசிரியை ஏகதேவி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சுஜித் ஜெயன் அலெக்ஸ் செய்திருந்தார்.

