ADDED : டிச 17, 2025 05:44 AM

புதுச்சேரி: மணமேடு கிராமத்தில் விவசாயிகளுக்கு விதை சிகிச்சை மற்றும் விதை துளை விதைப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் கிராம வேளாண் பணிப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, நெட்டப்பாக்கம், மணமேடு கிராமத்தில் விவசாயிகளுக்கு, நிலக்கடலைக்கு விதை சிகிச்சை மற்றும் விதை துளை விதைப்பு குறித்த புல காட்சி பயிற்சி நடத்தினர்.
வேளாண் மாணவர்கள், பாரம்பரிய விதைப்பு முறைகளை விட விதை சிகிச்சையின் அவசியம் குறித்தும், விதை மூலம் பரவும் நோய்களிலிருந்து பாதுகாப்பு, சிறந்த முளைப்பு திறன், செடிகளின் வலிமை அதிகரிப்பு, நல்ல பயிர் நிறுவல், விதை சிகிச்சையின் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.
தொடர்ந்து, நிலக்கடலை விதைப்பிற்கு பயன்படுத்தப்படும் விதைத் துளை கருவி குறித்து மாணவர்கள் செய்முறை விளக்கம் அளித்தனர்.

