தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சீனுவாசப்பெருமாள் சுவாமி திருக்கல்யாண உற்சவம்

 சீனுவாசப்பெருமாள் சுவாமி திருக்கல்யாண உற்சவம்

 சீனுவாசப்பெருமாள் சுவாமி திருக்கல்யாண உற்சவம்


ADDED : மார் 05, 2026 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 05:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திண்டிவனம் நல்லியக்கோடன் நகர், சீனுவாசப் பெருமாள் திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

மாசி மகத்தை முன்னிட்டு, வைத்திக்குப்பம் கடற்கரையில் நேற்று முன்தினம் நடந்த தீர்த்தவாரியில் திண்டிவனம் நல்லியக்கோடன் நகர், அலர்மேல் மங்கா சமேத சீனுவாசப் பெருமாள் பங்கேற்றார். முன்னதாக, நுாறடி சாலை, சிருங்கேரி மடம், சாரதாம்பாள் கோவில் சார்பில், பெருமாளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்து வீதியில் உள்ள வடமுகத்து வகுப்பு செட்டியார் திருமண மண்டபத்தில் சுவாமி தங்கி உள்ளார். சுவாமிக்கு நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்குமேல், ஸ்ரீதேவி பூமிதேவி - சீனுவாசப்பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விழாவில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை, திண்டிவனம் வெங்கடேசன், ஒருங்கிணைப்பாளர் தேவநாதன், கிருஷ்ணசாமி, சிவானந்தம், பாஸ்கரன், நடராஜன், துரை, முனுசாமி மற்றும் மாசிமக கடல் தீர்த்தவாரி கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

திருக்கல்யாணத்தை தொடர்ந்து, இன்று காலை 10:00 மணிக்கு மகா சுதர்சன ேஹாமம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us