/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய வருவாய் வழி படிப்பு உதவி தொகைக்கான தேர்வு; அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
/
தேசிய வருவாய் வழி படிப்பு உதவி தொகைக்கான தேர்வு; அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
தேசிய வருவாய் வழி படிப்பு உதவி தொகைக்கான தேர்வு; அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
தேசிய வருவாய் வழி படிப்பு உதவி தொகைக்கான தேர்வு; அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : பிப் 03, 2024 07:29 AM
புதுச்சேரி : தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை பெறுவதற்கான தேர்விற்கு அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.
பள்ளி கல்வித் துறை இணை இயக்குனர் சிவகாமி செய்திக்குறிப்பு:
புதுச்சேரி உள்பட மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு பள்ளி அல்லது அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தற்போது எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவியர், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்க முயற்சித்து வருகிறது.
மத்திய கல்வி அமைச்சகம் வழிகாட்டுதலின்படி, புதுச்சேரி பள்ளி கல்வி இயக்கத்தால் ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை பெறுவதற்கான தேர்வு நடத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் எழுத்து தேர்வு புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களில் மார்ச் 16ம் தேதி நடக்கிறது.
தேர்வின் மூலமாக தகுதி மற்றும் பெற்றோர் ஆண்டு வருமானம், ஜாதி, மண்டல அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வுசெய்யப்படும் 125 மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கு ஆண்டுதோறும் 12 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சகம் வழங்கும். பிராந்திய ரீதியாக புதுச்சேரி-93, காரைக்கால்-23, மாகி-3, ஏனாம்-6 என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலம் https://schooledn.py.gov.in என்ற இணைய முகவரியில் வரும் 5ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 20ம் தேதி.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

