/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் கல்லுாரியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி
/
மணக்குள விநாயகர் கல்லுாரியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி
மணக்குள விநாயகர் கல்லுாரியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி
மணக்குள விநாயகர் கல்லுாரியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி
ADDED : ஜூலை 25, 2025 02:36 AM

புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆங்கிலத்துறை பேராசிரியர் ரெனால்டி அமல்ராஜ் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக புதுச்சேரி ஜார்ஸ் தொழில் தீர்வு நிறுவனத்தின் தலைவர் பிரையல் கலந்து கொண்டு, 'தன்னைப் புரிந்துகொள்ளுதல்' என்ற தலைப்பில் பேசினார்.
தொடர்ந்து மாணவர்கள் மனநிலை, பள்ளி பருவத்தில் இருந்து கல்லுாரி வரும்போது எவ்வாறு மாற்றம் அடைகிறது. அந்த மாற்றத்தை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் விரிவான தொலைநோக்கு பார்வையுடன் வாழ்க்கையின் ஒவ்வொரு மணி நேரத்தையும் மகிழ்வோடு எதிர்கொள்வதோடு, எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டும்' என்றார்.
மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் முதலாமாண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வணிகவியல் துறைத் தலைவர் ஜானகிராமன் நன்றி கூறினார்.