அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி நிறைவு
அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி நிறைவு
ADDED : மார் 25, 2026 11:19 PM

அ நிறம் | அளவு
திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் அரிகோவிந்தன் தலைமை தாங்கினார். ஆசிரியர் உதயபானு வரவேற்றார். ஆசிரியர் கலைவாணி தொகுத்து வழங்கினார்.
இதில், தற்காப்பு கலை பயிற்றுனர் முத்துக்குமரன் மேற்பார்வையில் பயிற்சி பெற்ற மாணவிகள் சிலம்பாட்டம் மற்றும் தற்காப்பு கலை செயல் விளக்கம் அளித்தனர். பயிற்சியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
உடற்கல்வி ஆசிரியர் பாலசங்கர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மலர், கீதாஞ்சலி, மெர்லின் வெங்கடேசன் மற்றும் அலுவலக ஊழியர் ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
